Tuesday 7th of May 2024 09:12:54 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழைச் சேர்ந்த ஆணொருவர் உட்பட மேலும் ஐவரை பலியெடுத்தது கொரோனா!

யாழைச் சேர்ந்த ஆணொருவர் உட்பட மேலும் ஐவரை பலியெடுத்தது கொரோனா!


யாழ். குடாநாட்டைச் சேர்ந்த ஆணொருவர் உட்பட இலங்கையில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாத் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த மரணம் தேசிய கொவிட்-19 உயிரிழப்பு பட்டியலில் உள்வாங்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்,

யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த, 59 வயதான ஆண் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவரது மரணம் நேற்று முன்தினதினம் (ஏப்-19) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், இரண்டாம் நிலை பக்டீரியா தொற்றுடன் சிக்கலான கொவிட்-19 நியூமோனியா நிலை மற்றும் அவையவங்கள் செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான ஆண் ஒருவரும் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஏப்ரல்-17ஆம் திகதி,

மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த, 85 வயதான பெண் ஒருவர்,

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான பெண் ஒருவர்,

ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த, 90 வயதான பெண் ஒருவர் என மூவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேலும் ஐவர் உயிரிழந்துள்ள நிலையில் இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 625 ஆக உயர்வடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE